rohit sharma

இந்தியாவில்ஐ.பி.எல் கிரிக்கெட்திருவிழா ஆண்டுதோறும்நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிக்கானஏலம், சென்னையில் நாளை (18.02.2021) நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 292 வீரர்கள்ஏலம் விடப்படவுள்ளனர். நாளை மாலை 3 மணிக்குநடைபெறப்போகும் இந்த ஏலத்தை, ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.

Advertisment

இந்தநிலையில் கடந்த ஆண்டு, ஐக்கிய அரபுஅமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடந்த ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு வழக்கம்போல்இந்தியாவில்ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. இதனால் ஐ.பி.எல்லின்இரு முக்கிய அணிகளான மும்பைஇந்தியன்ஸ்மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளுக்குப் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான்அணி, ஏப்ரல்மாதத்தில்தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்தச் சுற்றுப்பயணம் ஏப்ரல்16 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது. மேலும் இந்தத்தொடர் முடிந்து இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கவீரர்கள், கரோனாதடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள்வழக்கம் போல ஏப்ரல்மாதத்தில்தொடங்கினால், மும்பைஇந்தியன்ஸ் அணிக்காகவிளையாடும்டிகாக், சென்னைசூப்பர் கிங்க்ஸ் அணிக்காகவிளையாடும்ஃபாஃப்டூப்ளசிஸ், லுங்கி நிகிடிஆகியோர்முதல் சிலபோட்டிகளில் விளையாட முடியாதநிலை ஏற்படலாம். இவர்கள் அந்தந்த ஐபிஎல் அணிகளின் முக்கியவீரர்கள் என்பதால், அந்த அணிகளுக்குப் பின்னடைவாக அமையக்கூடும். அதேபோல்வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடா,அன்ரிட்ச் நார்ட்ஜே ஆகியோரும் முதல் சிலபோட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படும்.

Advertisment