பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரர் சுட்டுக்கொலை...

Cape Town

தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வெர்னான் பிலாண்டரின் சகோதரர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெர்னான் பிலாண்டர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது சகோதரரான டைரோன் பிலாண்டர், ரேவன்ஸ்மீட் நகரில் நேற்று மதியம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், வெர்னான் பிலாண்டர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கம் வாயிலாக இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், 'கடின காலத்தில் நீங்கள் காட்டிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி' என அதில் தெரிவித்துள்ளார். வெர்னான் பிலாண்டர் குடும்பத்தினரின் சார்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கொலைக்கான காரணங்கள் குறித்து தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருவதாக அந்நாட்டு செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

cricket South Africa
இதையும் படியுங்கள்
Subscribe