South Africa creates history by winning the WTC trophy

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி கடந்த 11ஆம் தேதி உலக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியா அணி 212 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 138 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. அதனை தொடர்ந்து, நடைபெற்ற 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 202 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 83.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்து முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென்னாப்பிர்க்கா அணி கைப்பற்றியுள்ளது.

Advertisment

தென்னாப்பிரிக்கா அணி கடந்த 1992ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகஐசிசி தொடர்களில் தென்னாப்பிரிக்கா அணி பங்கேற்று வருகிறது. இதில், 1992ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி இறுதிப் போட்டியில் முதல்முறையாக தென்னாப்பிரிக்கா அணி பங்கேற்ற போதே மழையின் காரணமாக அந்த தோல்வி அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அரை இறுதிப் போட்டியில் டையில் முடிந்ததால் தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதியில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, 2011ஆம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தது. இறுதியாக 2024ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக கோப்பையை வென்று தென்னாப்பிரிக்கா அணி வரலாறு படைத்துள்ளது.