Skip to main content

முன்னாள் உலக சாம்பியனை ஊதித் தள்ளிய செளத் ஆப்பிரிக்கா!

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

South Africa beat Australia to win the World Cup match

 

உலகக் கோப்பையின் 10 ஆவது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் சௌத் ஆப்பிரிக்கா இடையே நேற்று(12.10.2023) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சௌத் ஆப்பிரிக்கா அணிக்கு பவுமா,டி காக் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்திருந்த போது பவுமா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டி காக் சதமடித்தார். அடுத்து வேன் டெர் டஸ்சென் 26 ரன்களில் ஆட்டமிழக்க, டி காக்கும் 109 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். 

 

பின்வரிசை வீரர்களில் மார்க்ரம் மட்டும் அரை சதம் அடித்து கை கொடுக்க, சௌத் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. ஆஸி தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க், ஜம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 312 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ஆஸி அணியில்ம் தொடக்க ஆட்டக்காரரான மார்ஸ் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் நேற்றும் 7 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த வேளையில் 70-6 என்ற இக்கட்டான சூழ்நிலையில் தவித்தது. 

 

South Africa beat Australia to win the World Cup match

 

இரட்டை இலக்கத்தை தாண்டுமா என நினைத்த வேளையில் லபுசேன், ஸ்டார்க் இணை ஓரளவு நிலைத்து ஆட 100 ரன்களை கடந்தது ஆஸ்திரேலிய அணி. ஸ்டார்க் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சௌத் ஆப்பிரிக்க அணியில் ரபாடா 3 விக்கெட்டுகளும், மகாராஜ், சம்ஷி, ஜான்சென் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க், இங்கிடி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது சதமடித்த டி காக்குக்கு வழங்கப்பட்டது. சௌத் ஆப்பிரிக்க அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியது. 5 முறை உலக சாம்பியன் அணியா என்று கேட்கும் அளவுக்கு ஆஸி அணியின் பீல்டிங், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு படு மோசமாக இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 5 கேட்ச்சுகளை தவற விட்டுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ரன் ரேட் அதிகம் பெற்று, சௌத் ஆப்பிரிக்க அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.

 

 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.