
இந்தியகிரிக்கெட்அணியின்முன்னாள் கேப்டனும், இந்தியகிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ்கங்குலி, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலைஉடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கங்குலிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்ததாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேலும் கங்குலி தற்போது நலமாக இருப்பதாகவும், அவருக்கு அஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே மேற்கு வங்கமுதல்வர் மம்தாபானர்ஜி, "சவுரவ்கங்குலிமாரடைப்பு காரணமாக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் விரைவாக பூரண நலம் பெற வேண்டும். எனதுசிந்தனையும் பிரார்த்தனையும் அவரிடமும் அவரதுகுடும்பத்தினரிடமும் இருக்கும்" எனதெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)