ADVERTISEMENT

“முதன்முதலாக மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் ஆனார்”- சுவாரசிய தகவல்கள்

11:55 AM Apr 24, 2019 | santhoshkumar

ஒரு விளையாட்டு மூலம் ஒரு வீரர் பிரபலமாவது இயல்பு. ஆனால் ஒரு வீரர் மூலம் விளையாட்டு பிரபலமாவது அரிதிலும் அரிதாக நடக்கும் ஒன்று. அதை செய்து காட்டியவர் சச்சின் என்னும் சகாப்தம். கிரிக்கெட்டுக்காக இங்கு சச்சின் இல்லை. சச்சினுக்காகவே இங்கு கிரிக்கெட். சச்சினுக்காக கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்கள் இங்கு ஏராளம். இந்தியாவில் கிரிக்கெட் தெரியாத பலருக்கு சச்சின் என்ற பெயர் பரிச்சயம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சச்சின் பற்றிய சுவாரசிய தகவல்கள்

1988-ஆம் ஆண்டு நடந்த ஒரு கண்காட்சி போட்டியில், பாகிஸ்தானுக்காக சச்சின் ஃபீல்டிங் செய்திருக்கிறார்.

வான்கடேவில் இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் இடையே நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் ‘பால் பாய்’ ஆக சச்சின் பணியாற்றியிருக்கிறார்.

சச்சின் தேவ் பர்மன் என்ற இசைகலைஞரின் நினைவாக சச்சின் என்ற பெயர் அவரது தந்தையால் வைக்கப்பட்டது.

விளம்பர நிகழ்ச்சிகளில் மதுபானம் தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மறுத்த சச்சின் நாட்டில் உள்ள இளைஞர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். இது சச்சின் என்ற ஒருவரை ரோல் மாடலாக கருதும் பலருக்கு தவறான உதாரணமாக அமைந்து விடும் என்பதால் நடிக்க மறுத்தார்.

போலியோ ஒழிப்பு மற்றும் சமூக அக்கறை கொண்ட விளம்பரங்கள் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை இலவசமாக செய்து தந்துள்ளார்.

மும்பையில் உள்ள அப்னாலயா என்கிற ஒரு அரசு சாரா அமைப்பில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நலிந்த குழந்தைகளுக்கு உதவி வருகிறார். இலவச கல்வி, ஸ்டேஷனரி பொருட்கள், சீருடைகள் போன்றவை வழங்கி வருகிறார்.

சச்சினுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம். ஆஸ்திரேலியா தொடரில் கவர் டிரைவ் ஷாட்டில் தொடர்ந்து அவுட் ஆக, 241 ரன்கள் அடித்தபோது ஒரு கவர் டிரைவ் ஷாட் கூட அடிக்கவில்லை.

இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் இவர்தான்.

சென்டிமென்ட்கள் மீது நம்பிக்கை கொண்டவர். கிரிக்கெட் என்றால் 10-ஆம் நம்பர் ஜெர்சி இல்லாமல் விளையாடமாட்டார்.

விளையாடப் போவதற்கு முன்னால் தன்னுடைய இடது பக்க பேடைத்தான் முதலில் அணிவார். ஆடப்போகும் பிட்ச்சில் முன்னரே ஒரு நடை நடந்துவிட்டு வருவார். போட்டிக்கு முன்னர் இசைக்கேட்பது எப்பொழுதும் பழக்கம்.

கிரிக்கெட் மட்டுமல்லாது வேறு விளையாட்டிலும் தனது பங்களிப்பை தந்துள்ளார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளஸ்டர்ஸ் அணிக்கும், பிரிமியர் பேட்மிட்டன் லீக் தொடரில் பெங்களூரு பிளஸ்டர்ஸ் அணிக்கும், ப்ரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்கும் கோ- ஓனராக இருந்தார்.

பிராட் ஹாக் தன் விக்கெட்டை எடுத்த பின், அந்த பந்தில் கையெழுத்து வாங்கியபோது ‘இது மீண்டும் நடக்காது’ என எழுதித் தந்தார் சச்சின். அதன் பிறகு அவர் ஹாக் பந்தில் அவர் அவுட் ஆகவில்லை.

பல முதன்முறை என்ற சாதனைகளை வைத்து இருக்கும் சச்சின்தான், முதன்முதலாக மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் ஆனார்.

1998-ல் சார்ஜாவில் நடைபெற்ற கோக்கோ-கோலா முத்தரப்பு ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு சதங்களை அடித்துக் கோப்பையை தனி ஒருவராக பெற்றுத் தந்தார்.

1999-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு சச்சின் 136 ரன்களைக் குவித்தார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக கும்ப்ளே 10 விக்கெட் எடுத்த போது, முதல் ஓவர் வீச வந்த கும்ப்ளேவின் மேற்சட்டையையும், தொப்பியையும் சச்சின் வாங்கி அம்பயரிடம் தந்தார். விக்கெட்கள் வீழ்ந்தது. இதனால் கும்ப்ளே 10 விக்கெட் எடுக்கும்வரை ஒவ்வொரு முறையும் இதை பின்பற்றினார் சச்சின்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் இரட்டை சதத்தை அடித்தபோது கிரிக்இன்போ இணையதள சர்வர் கிராஷ் ஆனது.


சச்சின் அதிக எடை கொண்ட பேட்டை பயன்படுத்தி வந்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் க்ளுஸ்னர் மட்டுமே இவரை விட உலகில் அதிக எடை கொண்ட பேட்டை பயன்படுத்தி வந்தார்.

அமைதியான குணம் கொண்ட சச்சின் பள்ளி பருவத்தில் சற்று குறும்பாக இருந்தார்.

டென்னிஸ் வீரரான ஜான் மெக்கென்ரோவின் தீவிர ரசிகராக சச்சின் இருந்தார்.

சச்சின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

யாருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

கனவுகளை மாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் ஒருநாள் கனவுகள் நிஜமாக மாறும்.

உயர்ந்த நிலையை அடைந்தாலும் உழைப்பை நிறுத்த வேண்டாம்.

எந்தத் துறையை நீங்கள் சார்ந்திருந்தாலும் ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பு.

திறமை முக்கியமனதாக இருந்தாலும் பயிற்சி மற்றும் ஒழுங்குமுறை மட்டுமே நீண்ட கால வெற்றியை அடைய உதவும். திறமை கொண்டு கடினமாக உழைக்காதபோது திறமை பயனற்றது.

நீண்ட கால வெற்றியை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். புதிய ஸ்கில்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு வெற்றியை அடைந்தாலும் எளிமையாகவும், தன்னடக்கமாகவும் இருப்பது அவசியம்.

கடவுளுக்கும், வாழ்க்கையில் உதவியவர்களுக்கும் நன்றியோடு இருப்பது முக்கியமான ஒன்று.

தனது மதிப்பை எப்பொழுதும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள். பொறுப்பற்றவராக இருக்காதீர்கள்.

கவனம் செலுத்தி, அர்ப்பணித்தால் உங்கள் குறிக்கோள்களை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.

தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதை அல்லது ஊக்குவிப்பதில் இருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் செய்யும் செயலை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். கவனம் செலுத்துதல், புதிதாக சிந்தித்தல், அதிக ஊக்கம் போன்றவை அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

குருவை மதித்து நடப்பதுதான் நல்ல மாணவனுக்கு அழகு என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்ந்தவர் சச்சின்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT