Solved Playing 11 confusion; Aussie lost his wicket

Advertisment

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்கியது.

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் அஷ்வின் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் ப்ளேயிங் 11: ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, ஸ்ரீகர் பரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகம்மது ஷமி, சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரு நாட்டு வீரர்களும் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ஆட்டத்தின் 3.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது வரை 7 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஸி அணி 1 விக்கெட்டை இழந்து 18 ரன்களில் ஆடி வருகிறது.