கிரிக்கெட் மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்ததால் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது.
விஜயவாடாவில் ஆந்திரா மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் போட்டு முடித்தவுடன் மைதானத்தின் விளையாடும் பகுதிக்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதன் காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. டாஸ் போடப்பட்டு, வீரர்கள் களமிறங்க தயாராக இருந்த நிலையில், இந்த பாம்பு திடீரென மைதானத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து மைதான பணியாளர்கள் பாம்பை விரட்டியடித்தனர். இது தொடர்பாக பிசிசிஐ பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.