Advertisment

பிக்பாஷ் தொடர்: சாதனை சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா!

smriti mandhana

மகளிருக்கானபிக்பாஷ் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்றுவருகிறது, இந்தத் தொடரில் நேற்று (17.11.2021) நடைபெற்ற போட்டியில்சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதின.

Advertisment

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 175 ரன்களைஎடுத்தது. அதிகபட்சமாக அந்தஅணியில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத்கவுர் 81 ரன்களைக் குவித்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சிட்னி தண்டர் அணி, விரைவிலேயேஇரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் இந்திய வீராங்கனைஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதமடித்தார்.

Advertisment

கடைசிவரை ஆட்டமிழக்காமல் 114 ரன்களைக் குவித்தாலும், மந்தனாவின் சதம் வெற்றிக்கு உதவவில்லை. சிட்னி தண்டர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்தப் போட்டியில் சதம் விளாசியதன்மூலம், மகளிர் பிக்பாஷ்போட்டியில் சதமடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

அதேபோல் மந்தனா அடித்த 114 ரன்கள், மகளிர்பிக்பாஷில்ஒரு வீராங்கனை ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச ரன்களாகும். ஆஷ்லே கார்ட்னர் என்ற வீராங்கனையும் 114 ரன்கள் அடித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

smriti mandhana wbbl
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe