Advertisment

தன்னைத் திட்டிய தோனி ரசிகருக்குப் பதிலடி கொடுத்த வர்ணனையாளர்!

simon doull

Advertisment

தன்னைத் திட்டிய தோனி ரசிகருக்கு, வர்ணனையாளர் சைமன் டல் பதிலடி கொடுத்துள்ளார்.

13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் சைமன் டல், ஐ.பி.எல் தொடரில் வர்ணனையாளராகச் செயல்பட்டு வருகிறார். வர்ணனையின் போது அணிகளின் செயல்பாடு மற்றும் வீரர்களின் செயல்பாடுகள் குறித்துகருத்துக் கூறுவது இயல்பானது. சில நேரங்களில் அத்தகைய கருத்துகள் ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துவிடும். அந்தவகையில், தோனி குறித்து சைமன் டல் கூறிய கருத்தால் அதிருப்தியடைந்த தோனி ரசிகர் ஒருவர், "சைமன், தோனி குறித்து கருத்துக் கூறுவதை நிறுத்துங்கள். இனி உங்களது வேலையை மட்டும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். தோனியை விமர்சிக்கும் அளவிற்கு நீங்கள் ஏதும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இது போன்ற செயல்களைக் கைவிடுங்கள்" என சைமன் டல்லைத் திட்டி சமூக வலைதளம் வாயிலாக அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதைப் பகிர்ந்த சைமன் டல், "மன்னிக்கவும், உங்களுக்கு வர்ணனையாளரின் பணி என்ன என்பது தெரியவில்லை என்று நினைக்கிறேன். எங்களது வேலையே, வீரர்கள் மற்றும் போட்டிகள் குறித்துகருத்துக் கூறுவதே" எனப் பதிலளித்துள்ளார்.

Dhoni ipl 2020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe