Skip to main content

வெள்ளி வென்றார் இந்தியாவின் சுஹாஸ் யாதிராஜ்! 

Published on 05/09/2021 | Edited on 05/09/2021

 

silver medal win for india ias officers

பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் யாதிராஜ் 21-15, 17- 21, 15-21 என்ற செட்டில் பிரான்சின் லூகாஸ் தோல்வியுற்றார்.  4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களுடன் இந்தியா 26- வது இடத்தில் உள்ளது. 

 

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி!

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார் சுஹாஸ் யாதிராஜ். பதக்கம் வென்ற இவர், உத்தரபிரதேச மாநில கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

 

வெள்ளிப் பதக்கம் வென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு உத்தரபிரதேச மாநில முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

 

Next Story

பதற்றத்தில் மாநிலம்; பதக்கம் வென்ற மணிப்பூர் வீரர்!

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

silver medalist Roshibina Devi says Dedicated to the people of Manipur

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் நடத்தும் இந்த போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், 6வது நாளான இன்று, வுஷூ விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

 

வுஷூ விளையாட்டின் மகளிர் 60 கிலோ எடைப் பிரிவுப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக மணிப்பூரைச் சேர்ந்த ரோஷிபினா தேவி பங்கேற்று விளையாடினார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வுஷூ மகளிர் 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ரோஷிபினா தேவி, சீனாவின் வூ ஜியோவெய்யை எதிர்த்து விளையாடினார். இந்த பிரிவின் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் 0-2 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியதால் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரோஷிபினா தேவி, “வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது. இந்த போட்டியில் என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன். இந்த ஆட்டத்தில் நான் செய்த தவறுகளை சரி செய்துகொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவேன். நான் பெற்ற இந்த வெள்ளிப் பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தியபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், ஏராளமான பொருட்கள் சேதமடைந்து, 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில், அந்த மாநிலத்தில் இருந்து ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட ரோஷிபினா தேவி  வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

Government job for Mariappan Thangavelu!

 

பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப்-1 பணிக்கான அரசு வேலையை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (03/11/2021) நடந்த நிகழ்ச்சியில், சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கம் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கரூர் மாவட்டம், புகளூர் காகிதபுரத்தில் உள்ள காகித ஆலையில் 'துணை மேலாளர் (விற்பனை)' பதவிக்கான பணி நியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

 

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொழில்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

 

"எனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் அரசு வேலை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று மாரியப்பன் தங்கவேலு தெரிவித்துள்ளார்.