silver medal win for india ias officers

Advertisment

பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் யாதிராஜ் 21-15, 17- 21, 15-21 என்ற செட்டில் பிரான்சின் லூகாஸ் தோல்வியுற்றார். 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களுடன் இந்தியா 26- வது இடத்தில் உள்ளது.

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி!

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார் சுஹாஸ் யாதிராஜ். பதக்கம் வென்ற இவர், உத்தரபிரதேச மாநில கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு உத்தரபிரதேச மாநில முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.