ஐ.பி.எல்: 12.25 கோடிக்கு ஏலம் போன ஷ்ரேயாஸ் ஐயர்!

IPL AUCTION

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் முதற்கட்டமாக முன்ணனி வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இதில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர், 12.25 கோடிக்கு ஏலம் போயுள்ளார்.

முதற்கட்டமாக ஏலம் போன வீரர்கள் விவரம்:

ஷிகர் தவானை 8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

அஸ்வினை 5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

பேட் கம்மின்ஸை 7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

ரபாடாவை 9.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.

டிரன்ட் போல்ட்டை 8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ்அணி ஏலம் எடுத்துள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

முகமது ஷமியை 6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

டு பிளசிஸை 7 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

டி காக்கை 6.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

வார்னரை 6.25 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe