Advertisment

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் - விலகும் முக்கிய வீரர்!

SHREYAS IYER

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி, நேற்று புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தவான், கோலி, கே.எல்.ராகுல், க்ருனால் பாண்டியா ஆகியோரின் சிறப்பானபேட்டிங்காலும், பிரசித் கிருஷ்ணாவின்சிறப்பான பந்துவீச்சாலும்இந்தியா அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

Advertisment

இந்தப் போட்டியின்போது, இந்திய வீரர்கள் ரோகித் மற்றும் ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதில், ஷ்ரேயஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்தநிலையில்ஷ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் குணமாக சில வாரங்களாகும் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான, மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும்ஆடமாட்டார்எனத் தகவல் வெளியாகிவுள்ளது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவிற்குவாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Advertisment

ஷ்ரேயஸ் ஐயர், விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும், முதல் சில ஆட்டங்களில் விளையாடமாட்டார் எனவும்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

INDIA VS ENGLAND SHREYAS IYER
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe