Skip to main content

"இது கவனமாக இருக்க வேண்டிய நேரம்" - ஷ்ரேயாஸ் ஐயர் கருத்து!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

Shreyas Iyer

 

13 -ஆவது ஐ.பி.எல் தொடரின் 38 -ஆவது லீக் போட்டி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

 

இப்போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு கிடைத்த 3 -ஆவது தோல்வியாகும். நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும், டெல்லி அணி 14 புள்ளிகளுடன் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஷிகர் தவான் ஆட்டம் குறித்தும், டெல்லி அணியின் தோல்வி குறித்தும் அவ்வணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "இது கவனமாக இருக்க வேண்டிய நேரம். இனி வரும் போட்டிகளில் கடினமான நேரத்தை எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனால், அது நடந்து முடிந்துவிட்டது. இனி கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டும். ஷிகர் தவான் ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மற்ற வீரர்கள் விளையாடுவதற்கு சரியான தளம் அமைத்துக்கொடுக்கிறார். அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். சில போட்டிகள் சொதப்பலாக அமைவது இயல்பானதுதான்" எனக் கூறியுள்ளார்.

 

 

 

Next Story

RR vs DC: பராக், அஸ்வின் அதிரடியால் பிழைத்த ராஜஸ்தான்!

Published on 28/03/2024 | Edited on 29/03/2024
rr vs dc ipl score update parag played magnificent innings

ஐபிஎல் 2024 இன் 9ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். பின்பு பட்லருடன் சாம்சன் இணைந்தார். ஆனால் சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் கலீல் அஹமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பிறகு பட்லருடன் ரியான் பராக் இணைந்தார். அந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பராக் அதிரடி காட்ட, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாறியது. அடுத்ததாக ஜுரேல் இறங்காமல், அஸ்வின் களமிறக்கப்பட்டார். அந்த முடிவு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. அஸ்வின் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜுரேலும் 20 ரன்களில் வீழ்ந்தார்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், மறுபுறம் பராக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். அடுத்த 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். ஹெட்மயரும் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி 1 ஓவர் முடிவில் 2 ரன்கள் எடுத்துள்ளது.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.