Advertisment

கிரிக்கெட் ரசிகர்களை தவறாக வழி நடத்தாதீர்கள் - அமிதாப் நடித்த விளம்பரத்துக்கு சச்சின் தரப்பு எதிர்ப்பு!

sachin tendulkar

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் புதிய கிரிக்கெட் தொடர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல்சீசன், வரும் 20 ஆம் தேதி ஓமன் நாட்டில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முதல் சீசனில் இந்தியா சார்பாக ஒரு அணியும், ஆசியா சார்பாக ஒரு அணியும், பிறநாடுகளை சேர்ந்த வீரர்களைஉள்ளடக்கிய ஒரு அணியும் பங்கேற்கவுள்ளன.

Advertisment

இந்தலெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில்,இந்திய ஜாம்பவான்கள் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் விளையாடவுள்ளனர். இந்தநிலையில்அண்மையில் இந்த கிரிக்கெட் தொடர் குறித்து அமிதாப் பச்சன் நடிப்பில் விளம்பரம் ஒன்று வெளியானது. அந்த விளம்பரத்தில் சச்சின் டெண்டுல்கரும்லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்தநிலையில்சச்சின் தரப்பு,லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சச்சின் விளையாடவில்லை என கூறியுள்ளதோடு, அமிதாப் நடித்த விளம்பரம் தொடர்பாக அந்த தொடரைநடத்துபவர்களைகண்டித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.ஆர்.டிஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் செய்தி தொடர்பாளர், "லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் சச்சின் பங்கேற்பது பற்றியசெய்து உண்மையல்ல. தொடரை நடத்துபவர்கள், கிரிக்கெட் ரசிகர்களையும் அமிதாப் பச்சனையும் தவறாக வழிநடத்துவதை தவிர்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe