Advertisment

“நான் மீண்டும் வருகிறேன்” - ஷோயப் அக்தர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர், நான் மீண்டும் கிரிக்கெட் ஆட வரப்போகிறேன் என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் செல்ஃபி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisment

ss

அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இன்றைய குழந்தைகள் தங்களுக்கு கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியும் என்று நம்புகின்றனர். அவர்கள் என் பவுலிங் வேகத்துக்கும்கூட சவால் அளிக்கலாம். ஆகவே, குழந்தைகளே நான் மீண்டும் வருகிறேன். அப்போது உங்களுக்கு வேகம் என்றால் என்னவென்று காட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் அந்த வீடியோவில் “ஹலோ, பிப்ரவரி 14-ம் தேதி குறித்து வைத்து கொள்ளுங்கள் நான் மீண்டும் வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

4வது பாகிஸ்தான் சூப்பர் லீக் இன்று தொடங்குகிறது (14/2/2019) இந்த நேரத்தில் இந்த வீடியோவை அவர் இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் கிரிக்கெட் இரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கிரிக்கெட் வரலாற்றிலே அதிவேகத்தில் பந்து வீசியவர் ஷோயப் அக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 161.3 கி.மீ வேகத்தில் வீசியப் பந்தே இது வரை உலக கிரிக்கெட் வரலாற்றின் மைல் கல்லாக உள்ளது.

Pakistan shoaib akhtar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe