Advertisment

மும்பை இந்தியன்ஸ் உடை! பாகிஸ்தான் விமானநிலையத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்! 

Sherfane Rutherford

வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்தார். இவருக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிகளில் கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததையடுத்து, அனைத்து அணி வீரர்களும் அடுத்த போட்டி நடைபெறும் நாடுகளுக்கோ அல்லது தங்கள் நாடுகளுக்கோ திரும்பிய வண்ணம் உள்ளனர்.

Advertisment

பாகிஸ்தானில் நடந்து வரும் சூப்பர் லீக் டி20 தொடரின் பிளேஆஃப் சுற்றுகள் கரோனா நெருக்கடி காரணமாக முன்னர் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது பிளேஆஃப் சுற்றுகள் நடைபெறும் தேதிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பிளேஆஃப் சுற்றில் நீடிக்கும் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், அதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் விரைந்தார்.இதனையடுத்து, பாகிஸ்தான் விமான நிலையத்தில் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் வந்திறங்கிய புகைப்படத்தை கராச்சி கிங்ஸ் அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

Advertisment

அதில் அவர் மும்பை அணியின் உடை மற்றும் முகக்கவசத்தை அணிந்திருந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Mumbai Indians
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe