2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் வாட்சன் சிறப்பாக விளையாடி சென்னையை இறுதி கட்டம் வரை அழைத்து சென்றார்.

Advertisment

shane watson releases a video and thanks fans for their support

அதிரடியாக விளையாடிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய அவர் கடைசி ஓவரில் தான் ரன் அவுட் ஆனார். அடிபட்ட காலுடன் 12 ஓவர்கள் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் அவரது காலில் 6 தையல்கள் போடப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வாட்சன். அதில் ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து, மீண்டும் அடுத்த ஆண்டும் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment