Shane Watson

Advertisment

ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். அமீரகத்தில் நடந்து வரும் 13-வது ஐபிஎல் தொடரில் பங்கெடுத்து வரும் அவரிடம், 20 ஓவர் போட்டிகளில் உலகின் சிறந்த ஐந்து பந்துவீச்சாளர்கள் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வாட்சன், மலிங்கா, அப்ரிடி, பும்ரா, பிராவோ, சுனில் நரைன் என்று ஐந்து வீரர்களைப் பட்டியலிட்டார்.

மேலும் இந்திய வீரரான பும்ராவை குறிப்பிட்டுபேசிய வாட்சன், "பும்ராவிற்கு 26 வயது தான் ஆகிறது. ஆனால் அவரது பந்து வீசும் விதம் தனித்துவமிக்கதாக உள்ளது. அவரிடம் நல்ல வேகம் உள்ளது. இரண்டு வகையிலும் பந்தை சுழலச் செய்ய முடிகிறது. குறிப்பாக அவர் வீசும் யார்க்கர் வகை பந்துகள் நம்பமுடியாததாக உள்ளது. அவரது பந்து வீச்சை எதிர்கொள்வது என்பது மிகவும் சவாலானது. அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடியும்போது, 20 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரராக இருப்பார்" எனக் கூறினார்.