Advertisment

20 ஓவர் போட்டிகளில் மூன்று மாற்றங்கள் தேவை -வார்னே பதிவு!

Shane Warne

20 ஓவர் போட்டிகளின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில், இந்த மூன்று மாற்றங்களை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார்.

Advertisment

ஷேன் வார்னே ஆஸ்திரேலிய அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார். நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். 20 ஓவர் போட்டிகளின் சுவாரசியத்தை அதிகரிக்க செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மூன்றினைப் பட்டியலிட்டுள்ளார்.

Advertisment

அதில், "மைதானத்தின் எல்லைக்கோட்டை அதிகரிக்க வேண்டும். சிறிய மைதானமாக இருக்கும் பட்சத்தில், அதிகப்படியான புற்கள் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வீரர் நான்கு ஓவர்கள் பந்து வீசலாம் எனும் விதியை 5 ஓவர்கள் வீச அனுமதி என்று மாற்ற வேண்டும். முழுமையாக பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக அமைக்க கூடாது. பேட்டிற்கும், பந்திற்கும் இடையே சம அளவிலான போட்டி இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் மைதானம் எப்படி இருக்குமோ அதற்கு இணையாக இருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

Shane warne
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe