Advertisment

இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது - ஷேன் வார்னே பேட்டி!

Shane Warne

Advertisment

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறாதது ஆச்சரியமளிக்கிறது என ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரரும், ராஜஸ்தான் அணியின் விளம்பரத் தூதருமான ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி, இரு போட்டிகளிலும் அபார வெற்றி கண்டுள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன், சென்னை அணிக்கு எதிராக 32 பந்துகளில், 74 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில் 85 ரன்களும் குவித்தார். இரு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு பெரிய அளவில் இருந்ததால் சஞ்சு சாம்சன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரரும், ராஜஸ்தான் அணியின் விளம்பரத் தூதருமான ஷேன் வார்னே சஞ்சு சாம்சன் குறித்துப் பேசியுள்ளார்.

அதில் அவர், "மூன்று வடிவ கிரிக்கெட்டில், இந்திய அணியில் சஞ்சு சாம்சன் எதிலும் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் அவரது விளையாட்டை ஆர்வமாகப் பார்த்து வருகிறேன்" எனக் கூறினார்.

Shane warne
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe