efaf

Advertisment

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. தற்பொழுது நடைபெற்று வரும் கடைசி போட்டியிலும் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ஆட்ட திறன் பற்றிய தனது கவலையை அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். நடந்துவரும் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் பற்றிய புள்ளிவிபரங்களோடு தனது கருத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், 'இந்த தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு இது ஒரு நல்ல புள்ளிவிபரம் இல்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய 2592 பந்துகளில் 205 மட்டுமே நேராக ஸ்டம்புக்கு வீசப்பட்டுள்ளது. இந்திய அணி இந்த தொடரில் 8 எல்.பி.டபுள்யூ எடுத்துள்ளது (அதில் 6 பும்ரா எடுத்தது), ஆனால் ஆஸ்திரேலியா அணி ஒரு எல்.பி.டபுள்யூ (நாதன் லியொன் எடுத்தது) மட்டுமே எடுத்துள்ளது. எனவே ஆஸி. அணி பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் சொதப்புகிறது' என தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.