Advertisment

தோனி குடும்பத்தின் மீதான விமர்சனம்... கொதித்தெழுந்த அஃப்ரிடி!

Shahid Afridi

13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளால் தடுமாறி வருகிறது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 5 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்விகள் அணி நிர்வாகத்தை கவலையடையச் செய்துள்ளது. மேலும் சென்னை அணி ரசிகர்கள், வீரர்களின் நிலையற்ற ஆட்டம் குறித்தும், வீரர்கள் தேர்வு குறித்தும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சில ரசிகர்கள்வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வரம்பு மீறியவிமர்சனத்தை முன்வைத்தனர். அந்தவகையில், தோனியின் மகள் குறித்து ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. அதனையடுத்து, தோனியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த நபரின் செயலை பலரும் கண்டித்து, தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடி தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "தோனி மற்றும் அவர் குடும்பத்தின் மீது என்ன வகையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இது முற்றிலும் தவறானது,இது நடந்திருக்கக்கூடாது. தோனி, இந்திய கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு அழைத்து சென்றவர். தன்னுடன் விளையாடிய இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என அனைவரையும் முன்னேற்றியவர். தோனி இத்தகைய விமர்சனங்களுக்கு உரியவர் அல்ல" எனகூறினார்.

Advertisment

Dhoni Shahid Afridi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe