Skip to main content

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த 16 வயது இந்திய கிரிக்கெட்டர்...

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

மகளிர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் 16 வயது ஷஃபாலி வர்மா, ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

Shafali Verma becomes World top T20I batswoman

 

 

2004 ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த ஷஃபாலி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். அதிரடியான வலதுகை ஆட்டக்காரராக ஷஃபாலி, அறிமுகமான ஒரே ஆண்டிற்குள் இந்திய அணியின் மிகமுக்கிய வீராங்கனையாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 2018 முதல் மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் சுஸி பேட்ஸை பின்னுக்குத்தள்ளி ஷஃபாலி தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதாக மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக ஷஃபாலியின் பேட்டிங்கும் கூறப்படுகிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஷஃபாலி 161 ரன்கள் குவித்து, இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார்.

 

 


 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

நாங்கள் தான் சாம்பியன்; மீண்டும் நிரூபித்த ஆஸ்திரேலியா!

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

Australia Won match world cup in 2023

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நான்கு ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ரோஹித் சர்மா மற்றும் கோலி இணை ஓரளவு அதிரடி காட்டியது. பவுண்டரிகள் சிக்ஸர்கள் என அதிரடி காட்டிய ரோஹித் வழக்கம்போல சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 47 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஸ்ரேயாசும் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

 

பின்னர் கோலியுடன் இணைந்த ராகுல் அணியை சரிவிலிருந்து மீட்டார். அரை சதம் கடந்த கோலி எதிர்பாராத விதமாக 54 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா 9 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் ராகுலும் அரை சதம் கடந்து 66 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டெயிலெண்டர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரிய குமாரும் 18 ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். 

 

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 7 ரன்னிலும், மார்ஸ் 15 ரன்னிலும், ஸ்மித் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 47/3 என்று தடுமாறும்போது இந்திய ரசிகர்களுக்கும் சிறிய நம்பிக்கை பிறந்தது.

 

ஆனால், அந்த நம்பிக்கையை தகர்த்தெறியும் வண்ணம் ஹெட் மற்றும் லபுஷேன் இருவரும் தொடக்கத்தில் நிதானமாக ஆடி பின்பு அதிரடி காட்ட தொடங்கினர். சிறப்பாக ஆடிய ஹெட், சதத்தை கடந்து 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணை நின்ற லபுஷேன் 58 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், 6வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில், பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் ஷிராஜ் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.  சிறப்பாக ஆடி சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருது 765 ரன்கள் குவித்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.