Advertisment

இருபது ஓவர் உலகக்கோப்பை: இந்திய அணியில் மாற்றம்? - முக்கிய முடிவெடுக்க நாளை கூடும் தேர்வுக்குழு!

rohit and virat

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை, வரும் அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில், இந்திய இருபது ஓவர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் சிலர் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.

Advertisment

அதேநேரத்தில், இந்த உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணிகளில் அக்டோபர் 10ஆம் தேதி வரை மாற்றங்கள் செய்ய கிரிக்கெட் வாரியங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதனால் இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisment

இந்தநிலையில், இந்திய இருபது ஓவர் அணி தொடர்பாக முக்கிய முடிவெடுக்க தேர்வுக்குழு கூட்டம் நாளை (09.10.2021) கூட இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்தக் கூட்டத்தில், பிசிசிஐ அதிகாரிகளும், அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களான விராட், ரோகித் ஆகியோரும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கலந்துகொள்ளவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாளைய கூட்டத்தின்போது இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீண்டும் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் இஷான் கிஷான் அணியில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Ravi Shastri virat kohli Rohit sharma T20 WORLD CUP 2021 team india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe