Advertisment

ஒருநாள் அணி கேப்டன்சியில் மாற்றம்? - விரைவில் விவாதிக்கும் இந்தியத் தேர்வு குழு!

VIRAT GANGULY

தென்னாப்பிரிக்கசுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி, இந்த வார இறுதியில் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்தநிலையில், அணியை தேர்தெடுப்பதற்காகக் கூடும் தேர்வு குழு கூட்டத்தில் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் கலந்துகொண்டு சில முக்கிய விஷயங்களைவிவாதிக்கவுள்ளதாகஅதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

குறிப்பாக, இந்தியகிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள், தற்போது இருபது ஓவர் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவேஒருநாள் அணிக்கும் கேப்டனாக இருக்கவேண்டும் என கருதுவதாகவும், அதுகுறித்து இந்த தேர்வுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

அதேபோல் சிராஜ் சிறப்பாக பந்துவீசி வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவுக்குஎதிரான டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மாவைதேர்வு செய்வது குறித்தும்இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகத்தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், ரோகித் சர்மாவை துணை கேப்டனாக நியமிப்பது குறித்தும்ஆலோசிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் ரஹானே, புஜாராஆகிய இருவரும் தென்னாப்பிரிக்காசெல்லும் அணியில் இடம்பெறுவார்கள்என்றாலும், அவர்கள் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவது சந்தேகமே எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Rohit sharma team india virat kohli
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe