Rohit Sharma

ரோகித் ஷர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறிய கருத்து புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் ‘Viru ki Baithak' என்ற பெயரில் முகநூலில் ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில், ஐபிஎல் போட்டிகளில் அணிகளின் செயல்பாடு, வீரர்களின் செயல்பாடு மற்றும் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் குறித்து நகைச்சுவையாக அலசுகிறார். அந்த நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குறித்து சேவாக் கூறிய கருத்து சர்ச்சையாக வெடித்துள்ளது.

காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா கடந்த இரு போட்டிகளில் விளையாடவில்லை. இதுகுறித்து பேசிய சேவாக், ரோகித் ஷர்மா விளையாடவில்லை, வடபாவ் காயமடைந்தால் என்ன? அவர் இடத்தை சமோசாபாவ் எடுத்துக்கொண்டது என சவுரப் திவாரியை குறிப்பிட்டார்.

சேவாக்கின் இந்த கருத்தானது உருவகேலி செய்யும் வகையில் உள்ளது என்று கூறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment