Advertisment

பாண்டியாவை புகழ்கிறாரா? ராயுடுவை கலாய்க்கிறாரா? சேவாக் கருத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்...

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் இந்திய அணி ஆல் ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா குறித்து பேசுகையில், ஹர்டிக் பாண்டியாவின் திறனை அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது என கூறியுள்ளார்.

Advertisment

sehwag interview about hardik pandya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த சேவாக்கிடம் ஹர்டிக் பாண்டியாவின் ஆட்ட திறன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஹர்டிக் பாண்டியா சிறந்த ஆல் ரவுண்டர். அவரின் திறனை அணியில் உள்ள மற்ற எந்த வீரர்களுடன் ஒப்பிட முடியாது. பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்படுகிறார். அவர் ஒரு சிறந்த 3 டைமன்ஷனல் பிளேயர். அவரை விட சிறந்த 3டி பிளேயர் இருந்திருந்தால் பிசிசிஐ கண்டிப்பாக அவரை தேர்ந்தெடுத்திருக்கும். அப்படி யாரும் இல்லாததால் தான் ஹர்டிக் பாண்டியாவை அணியில் எடுத்துள்ளனர்" என கூறினார்.

Advertisment

ஹர்டிக் பாண்டியாவை புகழ்ந்திருந்தாலும், இவரின் கருத்து ராயுடுவை கலாய்ப்பது போல உள்ளதாகஇணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது, இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அம்பதி ராயுடு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது விஜய் ஒரு 3டி பிளேயர் என பிசிசிஐ பதிலளித்தது. இதனை கலாய்க்கும் வகையில் ட்வீட் செய்திருந்த ராயுடு, "உலகக்கோப்பையை பார்க்க 3டி கிளாஸ் வாங்க போகிறேன்" என பதிவிட்டார். இதனை வைத்து ராயுடுவை இணையவாசிகள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் சேவாக்கின் இந்த கருத்தும் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

icc worldcup 2019 Sehwag
இதையும் படியுங்கள்
Subscribe