fgdfghdfghfd

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் சேவாக் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த தாக்குதலில் இறந்த 40 வீரர்களின் குழந்தைகளுக்கு ஆகும் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

Advertisment

இது பற்றி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், 'இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், என்னால் முடிந்ததை செய்வதற்காக குறைந்தபட்சமாக வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்களை என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன்' என கூறியுள்ளார். ஷேவாக்கின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்கியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், நன்றிகளும் குவிந்து வருகின்றன.

Advertisment