Advertisment

இந்த ஐபிஎல் தொடர் தோனியால் கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கப்போகிறது - சேவாக் பேச்சு

dhoni

13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இரு அணி வீரர்களும் இதற்கான தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை அணியின் கேப்டனுமான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின் நடக்கும் முதல் போட்டி என்பதால் இப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரரான சேவாக் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "வரவிருக்கிற ஐபிஎல் தொடர், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்க போகிறது. சர்வதேச போட்டிகளுக்கான ஓய்வு அறிவிப்பிற்கு பிறகு தோனியை மீண்டும் களத்தில் பார்ப்பது மகிழ்ச்சியான விஷயம். கரோனா ஊரடங்கு காலத்தில் பழைய போட்டிகளின் காணொளிகளை எடுத்து அதை பகுப்பாய்வு செய்து பார்த்தேன். என்னுடைய சில போட்டிகளை கூட எடுத்து பார்த்தேன். கிரிக்கெட் என்பது இந்தியர்களின் டிஎன்ஏ-வில் கலந்த ஒன்றாக உள்ளது" என்றார்.

Advertisment

Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe