இரண்டாவது டெஸ்ட் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி வெற்றி!

Second Test - South Africa wins!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜோகன்னஸ்பர்கில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்திய அணி நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை மூன்று விக்கெட்டுகளை இழந்து எட்டியது தென்னாப்பிரிக்கா அணி. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரன் விவரம் குறித்து பார்ப்போம். இந்திய அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முறையே 202 மற்றும் 266 ரன்களை எடுத்தது.

அதேபோல், தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட் இழப்புக்கு 243 ரன்களையும் எடுத்தது.

India
இதையும் படியுங்கள்
Subscribe