Second T20 match against Sri Lanka; Sanju Samson Departs

Advertisment

இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடஉள்ளது. இதில் முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தார். சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இலங்கைக்கு எதிரான தொடரில் வாய்ப்பினை பெற்றார்.

இந்நிலையில் முதல் போட்டியின் பீல்டிங்கின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் இரண்டாம் போட்டிக்காக இந்திய அணியுடன் புனேவிற்கு செல்லவில்லை. அவர் சிகிச்சைக்காக மும்பையில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடமாட்டார் எனத்தெரிகிறது. காயமடைந்த சஞ்சு சாம்சன்க்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisment

அயர்லாந்து அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும்படி அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு சஞ்சு சாம்சன் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.