காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கம்

 Second Commonwealth medal for India!

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏற்கனவேஇந்தியா வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்த நிலையில் தற்பொழுது இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளது இந்தியா.

22ஆவது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டிகள் நடைபெறக்கூடிய முதல் நாளிலேயே இந்தியா தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை உரித்தாக்கியுள்ளது. ஏற்கனவே 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்க்கார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில், 61 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் பிரிவில் 269 கிலோ எடையைத் தூக்கி இந்திய வீரர் குருராஜா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் தொடரில்இந்திய வீரர் குருராஜா பெறும் இரண்டாவது பதக்கம் இது. ஏற்கனவே கடந்த 2018ஆம் நடைபெற்ற காமன்வெல்த் தொடரிலும் பதக்கம் வென்றிருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இந்திய அணி 66 பதக்கங்களைக் குவிந்திருந்த நிலையில், முதல் நாளிலேயே பதக்க அறுவடையை இந்தியா தொடங்கியுள்ளதால் இந்த முறை இந்திய அணி பெறும் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India
இதையும் படியுங்கள்
Subscribe