Advertisment

பாக். அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கிவீசப்பட்ட சர்ஃபராஸ்... புதிய கேப்டன்கள் பெயர் அறிவிப்பு...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Advertisment

sarfaraz ahmed sacked as pakistan captain

உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கான முக்கிய காரணமாக அந்நாட்டு ரசிகர்களால் கூறப்பட்டது சர்ஃபராஸ் அகமதின் கேப்டன்சி தான். உலகக்கோப்பை தோல்வியின் விளைவாக பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளராக்கப்பட்டார். இந்த நிலையில் டெஸ்ட், டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அசார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் ஆசம் டி-20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

babar azam sarfaraz ahmad Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe