Advertisment

ஐபிஎல் வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியானது... சஞ்சய் மஞ்சுரேக்கர் அதிரடி நீக்கம்!!!

sanjay manjrekar

13-வது ஐபிஎல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. கரோனா தொற்று காரணமாக உலகின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது, இந்தாண்டு ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ முழுமுனைப்போடு இருந்தது. அதன்படி அறிவிப்புகள் வெளியாகி அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது ஐபிஎல் போட்டிகளின்போது வர்ணனையாளர்களாக செயல்படுபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisment

அந்தபட்டியலில் ஹர்ஷா போக்ளே, கவாஸ்கர், அஞ்சும் சோப்ரா, முரளி கார்த்திக், தீப்தாஸ் குப்தா, சிவராம கிருஷ்ணன்,ரோஹன் கவாஸ்கர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முன்னணி வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சுரேக்கர் பெயர் இடம் பெறவில்லை. கடந்த உலக கோப்பை போட்டியின் போது இந்திய வீரர் ஜடேஜாவை மோசமான முறையில் விமர்சனம் செய்த சர்ச்சையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisment

IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe