Advertisment

ஹர்ஷா போக்லேவை கிண்டல் செய்த சஞ்சய் மஞ்சிரேக்கர்... மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ரசிகர்கள்...

கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக வர்ணனையாளராக இருப்பவர் ஹர்ஷா போக்லே. இந்திய மக்கள் இடையே நன்கு பரிட்சயம் பெற்ற இவரின் வர்ணனைக்கு தனி ரசிகர் வட்டம் உண்டு. அண்மையில் கொல்கத்தாவில் இந்தியா வங்கதேசம் இடையே நடந்து முடிந்த பிங்க் பால் டெஸ்ட் மேட்சில் இவர் வர்ணனையாளராக கலந்துகொண்டார். இதே போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சிரேக்கரும் வர்ணனையாளராக இருந்தார்.

Advertisment

sanjay manjrekar and harsha bhogle controversy

போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது விவாதம் ஏற்பட்டது. அப்போது ஹர்ஷா போக்லே விளையாட்டு வீரர்களிடம் பிங்க் பால் அனுபவத்தை பற்றி நாம் கேட்க வேண்டும் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சஞ்சய் மஞ்சிரேக்கர் " அது தேவையே இல்லை. நாங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். எங்களிடம் இருந்தே உங்களுக்கு பதில்கள் கிடைக்கும்" என்று கூறினார்.

Advertisment

இவ்வாறு சஞ்சய் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உண்டாகியுள்ளது. இது ஹர்ஷா போக்லே கிரிக்கெட் விளையாடாமலே வர்ணனையாளராக வந்திருக்கிறார் என்பதை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும், சஞ்சய் மஞ்சிரேக்கர் கூறியது தவறு என்றும் ஹர்ஷா கிரிக்கெட் விளையாடாமலே வர்ணனையாளராக வந்திருகிறார் ஆனால் நீங்கள் விளையாடாமல் போயிருந்தால் உங்களை எங்களுக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை என்றும் கூறி வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும், ஒரு சிலர் ஹர்ஷா போக்லேவிடம் சஞ்சய் மஞ்சிரேக்கர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சஞ்சய் மஞ்சிரேக்கர் வர்ணனையாளராக இருக்க தகுதியே இல்லை, அவரை நீக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.சஞ்சய் மஞ்சிரேக்கர் அண்மை காலங்களில் இது போன்ற கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

team india
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe