Advertisment

"ஒரு தெளிவும் இல்லை..." ரோகித் ஷர்மா காயம் குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து!

Sanjay Manjrekar

ஒரு தெளிவும் இல்லை என ரோகித் ஷர்மாவின்காயம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கும் அணியின் வீரர்கள் பட்டியல் கடந்த மாத இறுதியில் வெளியானது. இந்திய அணியின் அதிரடி வீரரான ரோகித் ஷர்மாவை மூன்று தரப்பட்ட கிரிக்கெட் தொடர்களுக்கான அணியிலும் தேர்வு செய்யாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐ.பி.எல் போட்டிகளின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே ரோகித் ஷர்மா அணியில் சேர்க்கப்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டாலும், அடுத்தடுத்த ஐ.பி.எல் போட்டிகளில் ரோகித் ஷர்மா களமிறங்கியது கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Advertisment

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரோகித் ஷர்மா சேர்த்துக் கொள்ளப்பட்டாலும், அவரது காயத்தின் தன்மை குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் ரோகித் ஷர்மாவின் காயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், "ரோகித் ஷர்மாவின் உடற்தகுதி விஷயத்தில் எந்தத் தெளிவும் இல்லை. இதில் பி.சி.சி.ஐ-க்கு ஒரு நிலைப்பாடு இருக்கும். இது குறித்தான உண்மையான தகவல்கள் தெரியவில்லை என்றால், அது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுக்கும்" எனக் கூறினார்.

Rohit sharma Sanjay Manjrekar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe