பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடுவதில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

Advertisment

Sania Mirza wins Hobart International Women's doubles title

இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்த ஏடிபி அந்தஸ்து கொண்ட ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்சோனக்குடன் சேர்ந்து சானியா விளையாடினார். தொடரின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி, இறுதி போட்டி வரை முன்னேறியது. இன்று நடைபெற்ற இந்த தொடரின் இறுதி போட்டியில், சீனாவின் ஷாய் பெங், ஷாய் ஹாங் இணையை சானியா மிர்சா இணை எதிர்கொண்டது.

ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சீனாவின் ஷாய் பெங், ஷாய் ஹாங் ஜோடியை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை சானியா, நாடியா ஜோடி வென்றது. இரண்டு வருடங்கள் ஓய்வில் இருந்த சானியா வெற்றியுடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.