இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பின் குழந்தை பிறந்த நிலையில் டென்னியஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அது மட்டும் இல்லாமல் அவரது உடல் எடை வெகுவாக கூடி இருந்தது. இதன் காரணமாக டென்னிஸ் போட்டியில் இனி அவர் பங்கேற்கமாட்டார் என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்தனர். ஆனால் நான்கு மாதத்தில் 26 கிலோ எடையைக் குறைத்து, ஹோபார்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நாடியாவுடன் இணைந்து கடந்த மாதம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Advertisment

sania mirza

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தற்போது நான்கு மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைத்தது எப்படி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா பகிர்ந்துள்ளார். அதில் எடை குறைப்புக்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டு, "நாம் அனைவரும் சில இலக்குகளை நிர்ணயத்துக்கொள்வோம். அத்த இலக்குகள் பெருமை கொள்ளும் வகையில் இருக்கவேண்டும். நான் எனது எடையை 89 கிலோவிலிருந்து 63 கிலோவாக குறைப்பதற்கு நான்கு மாதங்கள் எடுத்தன. குழந்தைப் பிறந்ததற்குப் பிறகு உடல் எடை கூடியிருந்த நான், தற்போது ஆரோக்கியமான உடலைக் கொண்டு வருவதற்கு இந்தக் காலம் தேவைப்பட்டுள்ளது. உங்களைச் சுற்றி யார் என்ன சொன்னாலும் உங்கள் கனவை விட்டுவிடாதீர்கள். என்னால் முடியும் என்றால், இங்கு அனைவராலும் முடியும்" என குறிப்பிட்டுள்ளார். இதை ரீட்வீட் செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.