Advertisment

பவர்பிளேயில் அதிக விக்கெட்! இந்திய வீரர் படைத்த சாதனை!

SRH

பவர்பிளேயில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஹைதராபாத் அணி வீரர் சந்தீப் ஷர்மா படைத்துள்ளார்.

Advertisment

13-ஆவது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது. மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம், ஐபிஎல் தொடரில் அவர் வீழ்த்தியுள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கையானது 108-ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான சந்தீப் ஷர்மா, இதுவரை 90 போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில், 53 விக்கெட்டுகள் பவர்பிளேயில் வீழ்த்தியவை ஆகும்.

இதன்மூலம், ஐபிஎல் அரங்கில் பவர்பிளேயில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையானது சந்தீப் ஷர்மா வசமாகியுள்ளது. முன்னதாக ஜாஹிர் கான் 52 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ipl 2020 SRH
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe