sam curran

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வீரரான சாம் கரண் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்தார். நடந்து முடிந்த 13-ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ஆட்டம் குறிப்பிடத்தக்க அளவில் இல்லையென்றாலும், சாம் கரண் பேட்டிங் மற்றும் தனது பந்து வீச்சால் பலரது கவனத்தையும் ஈர்த்தார். சென்னை அணி ரசிகர்களால் 'சுட்டிக்குழந்தை' என அழைக்கப்பட்ட இவர், 13 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு பேட்டிங்கில் 186 ரன்களும் குவித்தார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாம் கரண், சென்னை அணிக்காக விளையாடிய அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "ஐபிஎல் தொடரை முழுமையாக அனுபவித்து விளையாடினேன். என்னுடைய விளையாட்டை அடுத்த தரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதைப் போல உணர்கிறேன். சென்னை சென்று விளையாட ஆரம்பித்தது முதல் என்னுடைய விளையாட்டு மேம்பட்டுள்ளது. ஒரு வழக்கமான வீரராக மாற இன்னும் என் விளையாட்டை நான் மேம்படுத்த வேண்டியுள்ளது" எனக் கூறினார்.

Advertisment