sakshi about dhonis future plans

தோனியின் ஓய்வு குறித்து எதற்காக வதந்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை என சாக்க்ஷி கவலை தெரிவித்துள்ளார்.

Advertisment

உலகக்கோப்பைபோட்டியில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார். ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச தொடரிலும் அவரது பெயர் பரிசீலிக்கப்படவி்ல்லை. இந்த சூழலில் தோனி ஓய்வு பெறப்போகிறார் என தகவல்கள் பரவ ஆரம்பித்தன. ஆனால் பல்வேறு தரப்பாலும் இந்த செய்தி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஊரடங்கு காலத்தில் தனது ராஞ்சி பண்ணைவீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வரும் தோனி, ஓய்வு குறித்து அறிவிக்கப்போகிறார் என அண்மையில் சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால் இதற்கு தோனியின் மனைவி சாக்க்ஷி உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில் இதுபோன்ற வதந்திகள் மற்றும் தோனியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய சாக்க்ஷி, "சமூகவலைதளங்களில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள தோனிக்கு ஆர்வமில்லை. ஆனால், தோனி ஓய்வை அறிவிக்கப்போவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வெளிவரும் வதந்திகள், வேதனையைதருகின்றன. ஏன், எதற்காக இப்படி செய்கிறார்கள் என தெரியவில்லை. இவற்றை பார்த்து பலரும் எங்களை தொடர்புகொண்டு விசாரிக்கின்றனர். மகி நிச்சயம் இந்திய அணி்க்குத் திரும்புவார். எனவே, தோனி ஓய்வு என்பதெல்லாம் வதந்திதான். கிரிக்கெட் தான் மகிக்கு உயிர், அதைத்தான் அவர் விரும்புகிறார். இப்போது மகி வீட்டில் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருந்து வருகிறார். அது அவரின் மன அழுத்தங்களை போக்குகிறது. ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு நடக்குமா, இல்லையா என்பது முழுமையாக தெரியவில்லை. ஆனால், என் மகள் ஐபிஎல் எப்போது நடக்கும் என தொடர்ந்து கேட்டு வருகிறாள்" என தெரிவித்துள்ளார்.