saina

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான சாய்னா நேவாலின் திருமணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

உலக பேட்மிட்டன் தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருப்பவர் சாய்னா நேவால். இவர் நீண்டகாலமாக இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை ஒலிம்பிக் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி என 20-க்கும் மேற்பட்ட முக்கியமான வெற்றிகளைப் பெற்றுள்ளார். 28 வயதாகும் இவர் பருபள்ளி காஷ்யப் எனும் பேட்மிட்டன் வீரரை வருகிற டிசம்பர் 16-ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

பேட்மிட்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்திடம் இவர்கள் இருவரும் கடந்த 2005-ல் இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், பத்தாண்டுகளாக காதலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. காமன்வெல்த் போட்டிகளின் போது சாய்னா நேவாலின் தந்தையை அனுமதிக்கவில்லை. அப்போது தனக்கு பருபள்ளி காஷ்யப் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்த சாய்னா, அப்போது தங்கம் வென்று அசத்தினார்.

Advertisment

இவர்களது திருமண விழாவை அடுத்து, டிசம்பர் 21-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பருபள்ளி காஷ்யப்பும் மிகச்சிறந்த பேட்மிட்டனாக இருந்தவர்தான். உலக தரவரிசையில் 6-வது இடம்வரை முன்னேறிய காஷ்யப், காயம் காரணமாக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.