மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் திரைத்துறை, அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sacyuv.jpg)
இதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், யுசஃப் பதான், அஜித் அகர்கர், பார்திவ் படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் இணைந்து அந்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின் "இது வாழ்நாள் அணி" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அதேபோல யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளாள் புகைப்படத்தில் ‘பழமை பொன் போன்றது’ என்றும், தங்கள் வயதை குறிக்கும் வகையில் ‘ரொம்ப பழைமை இல்லை’ என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us