Advertisment

சச்சின் கொடுத்த சர்ப்ரைஸ்... மகளிர் தினத்தில் நடந்த சுவாரசியம்...வைரல் வீடியோ...

மார்ச் 8 ஆம் தேதியான நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல துறைகளில் உள்ள பிரபலங்களும் தங்களது மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

Advertisment

sachin

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தனது மகளிர் தின வாழ்த்துக்களை சற்று வித்தியாசமான முறையில் பகிர்ந்துள்ளார். மைதானத்தில் பேட்டை பிடித்து பல சதங்களை விளாசிய சச்சின், மகளிர் தின ஸ்பெஷலாக சமையலறையில் இறங்கி கலக்கியுள்ளார்.

தனது தாய் ரஜ்னி மற்றும் மனைவிக்கு தனது கைகளாலேயே சமைத்து அவர்களுக்கு பரிமாறியுள்ளார். மேலும் அவர் சமையலறையில் சமைத்து தனது தாய்க்கு அதனை தருவதை வீடியோ எடுத்து அதனை ட்விட்டரில் பதிவிட்டு தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் தான் சமைத்த உணவை, தனது அம்மாவிடம் ருசி பார்க்க கொடுத்த சச்சின், ”உங்கள் சமையல் போல நான் சமைத்துள்ளேனா?” என கேட்டார். அதற்க்கு சச்சினின் அம்மா சமையலை ருசி பார்த்துவிட்டு, சுவையாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சச்சின், ”தனது மகன் எந்தவொரு முயற்சியில் தோல்வியுற்றாலும் அவனது அம்மா அவனிடம் அதை தெரிவிக்க மாட்டாள். இது தான் தாய் பாசம்” என்றார். சச்சினின் இந்த மகளிர் தின வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sachin Tendulkar
இதையும் படியுங்கள்
Subscribe