இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலியா அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது குறித்து ட்விட்டரில் கருத்து கூறியுள்ள சச்சின், ஆஸ்திரேலியா அணி அவர்களது சொந்த மண்ணில் விளையாடஇவ்வளவு திணறிநான் பார்த்ததில்லை. ஆஸ்திரேலியாவின் இந்த நிலையை இந்திய அணி சரியாக பயன்படுத்தி விளையாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் சிறப்பாக பந்துவீசிய அஸ்வினுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்- சச்சின் டெண்டுல்கர்
Advertisment