கோலி அடித்த சதம் - சச்சின் சதத்தில் ஐந்து விசித்திர ஒற்றுமைகள்! 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றவர் கேப்டன் விராட் கோலி. முதல் இன்னிங்ஸில் 97 ரன்கள் எடுத்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 103 ரன்கள் எடுத்து தவறவிட்ட சதத்தைப் பூர்த்திசெய்தார். இக்கட்டான சூழலில் விராட் கோலி விளாசிய இந்த சமம் பலரிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. இது விராட் கோலியின் 58-ஆவது சர்வதேச சதமாகும். குறிப்பாக இந்த சதத்துக்கும், 2001-ஆம் ஆண்டு சச்சின் தெண்டுலர் அடித்த சதத்தில் ஐந்து விசித்திரமான ஒற்றுமைகள் இருக்கின்றன.

Virat

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இரண்டுக்கும் இங்கிலாந்துதான் எதிரணி!

2001-ஆம் ஆண்டு இங்கிலாந்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அகமதாபாத்தில் நடந்த போட்டியில் சச்சின் 197 பந்துகளை எதிர்கொண்டு, 103 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சதம் இந்திய அணி அந்தத் தொடரில் வெற்றிபெற்று, 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற உதவியது. விராட் அடித்த சதம் இந்திய அணியை 1 - 2 என்ற நிலைக்குக் கொண்டுவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஓப்பனர்களுக்குப் பின் களமிறங்கியது..

அப்போதைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தீப் தேஸ்குப்தா மற்றும் ஷிவ் சுந்தர் ஆகியோர் முறையே 17 மற்றும் 41 ரன்களில் வெளியேறினர். நான்காவது நபராக களமிறங்கிய சச்சின் சதமடித்தார். அதேபோல், தற்போதைய போட்டியில் ஓப்பனர்கள் ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் 36 மற்றும் 44 ரன்களில் வெளியேற கோலி சதமடித்தார். கோலியும் நான்காவது இடத்தில்தான் களமிறங்கினார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

லக்‌ஷ்மன் - புஜாரா மேஜிக்!

சச்சின் தெண்டுலர் ஓப்பனிங் வீரர்களுக்குப் பின் களமிறங்கினாலும், கங்குலி மற்றும் ட்ராவிட் ஆகியோர் அவருக்குக் கைக்கொடுக்கவில்லை. ஆனால், விவிஎஸ் லக்‌ஷ்மன் 75 ரன்கள் அடித்து, சச்சினுக்கு உறுதுணையாக அன்று இருந்தார். இந்தப் போட்டியில் விராட் கோலியுடன் சதீஷ்வர் புஜாரா 72 ரன்கள் எடுத்து கோலியுடன் வலுவான கூட்டணி அமைத்துக் கொண்டார்.

பவுண்டரியுடன் சதம் கடந்தது

அகமதாபாத் போட்டியில் சச்சின் 96 ரன்கள் இருந்தபோது, பந்தை பவுண்டரிக்கு விளாசித்தான் சதமடித்தார். கோலியும் 98 ரன்கள் இருந்தபோது பவுண்டரி அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார். மேலும், இருவரும் யார் பந்தில் சதமடித்தார்களோ, அதே பவுலரின் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்கள். சச்சினுக்கு ஹொக்கார்டு மற்றும் கோலிக்கு வோக்ஸ்!

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

58-ஆவது சர்வதேச சதம்!

அகமதாபாத்தில் சச்சின் தனது 58-ஆவது சர்வதேச சதத்தை அடித்தார். அதுவரை 31 ஒருநாள் சதங்களை விளாசியிருந்தார். 35 ஒருநாள் சதங்கள் விளாசியுள்ள விராட், தனது 23-ஆவது டெஸ்ட் சதத்தை அடித்ததன் மூலம், 58-ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால், சச்சின் தெண்டுல்கர் அதற்கடுத்த காலகட்டத்தில் 42 சர்வதேச சதங்கள் அடித்து, யாரும் எட்டமுடியாத நூறு சதங்களை நிறைவுசெய்தார். கோலி அதைத் தொடுவாரா என்பதை வருங்காலம் சொல்லும்!

indian cricket Sachin Tendulkar sports virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe