/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sachin_6.jpg)
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின், நிக்கோலஸ் பூரன் விளையாடும் விதம் டுமினியின் ஆட்டத்தை நினைவு படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின், நிக்கோலஸ் பூரன் ஆட்டம் குறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
அதில் அவர், "நிக்கோலஸ் பூரன் ஆட்டத்தில் சில அற்புதமான ஷாட்கள் இருந்தன. பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு விளையாடினார். களத்தில் அவர் விளையாடிய விதம் டுமினியின் ஆட்டத்தை நினைவு படுத்துகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)