sachin congratulated Kohli century  worldcup cricket update

உலகக் கோப்பை 2023ன் 37 ஆவது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 49 ஆவது சதத்தைக் கடந்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய அணியின் ஜாம்பவான், மாஸ்டர் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். இதனை பாராட்டி ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர், கோலி அடித்த இந்த சதத்திற்கு தனது வாழ்த்துகளை எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், “விராட் நீங்கள் சிறப்பாக விளையாடியுள்ளீர்கள். 49 ஆவது சதத்தில் இருந்து 50 ஆவது சதத்திற்கு செல்ல எனக்கு 365 நாட்கள் தேவைப்பட்டது. நீங்கள் 49 ஆவது சதத்தில் இருந்து 50 ஆவது சதத்திற்கு சில நாட்களில் சென்று விடுவீர்கள். வாழ்த்துகள்!!” என்று பதிவிட்டுள்ளார். சச்சினின் இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisment